ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஆராய ஷானியை நியமிக்குமாறு கோரிக்கை
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஷானி அபேசேகரவை ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அந்த அதிகாரி மீது ஜனாதிபதியும் நம்பிக்கை தெரிவித்திருப்பதால், அது தொடர்பான விசாரணைகளை அவரிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
இலத்திரனியல், அச்சு மற்றும் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஊடகங்களை சுயமாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தினால் சர்வாதிகார நிலைமை உருவாகும் எனவும் தெரிவித்தார்.
Post a Comment