யாழில் இதுவரை பதிவான மழைவீழ்ச்சியின் விபரம்

 கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் டிசம்பர் 1ஆம் திகதி வரையான காலப்பகுதியிலே யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் 697.4 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நவம்பர் மாதம் 26 ஆம் திகதி 24 மணி நேரத்திலே 253 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி கிடைக்கப் பெற்றுள்ளதுடன் இது ஒரு பாரிய அளவாக காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ”அந்த வகையிலே யாழ்ப்பாணம் மாவட்டத்திலே 21 ஆயிரத்து 980 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 693 பேர் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

29ஆம் திகதி நவம்பர் மாதம் வரை 82 பாதுகாப்பு நிலையங்களிலே 2,163 குடும்பங்களைச் சேர்ந்த 7417 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.


டிசம்பர் முதலாம் திகதி 26 பாதுகாப்பு நிலையங்களில் 692 குடும்பங்களை சேர்ந்த 2393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். 

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உப்புக்கேணி என்ற பகுதியிலே நீர் வழிந்து ஓட முடியாமல் 50 குடும்பங்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கி இருக்கிறார்கள்.

வெள்ளநீர் உடனடியாக வழிந்தோடக்கூடிய சாத்தியப்பாடு இல்லாத காரணத்தினால் நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் அந்த நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வடிகால் அமைப்பு முறை

அதேபோல பல்வேறுபட்ட முறைப்பாடுகளும் எங்களுக்கு கிடைத்த வண்ணம் உள்ளன.

அந்த வகையிலே இந்த வெள்ளம் வழிந்து ஓட முடியாத நிலை தொடரும் காணப்படுமாயின் அதற்குரிய பொருத்தமான பொறிமுறை மூலம் அந்த வெள்ளம் அகற்றப்பட இருக்கின்றது.


தொடர்ச்சியாக எதிர்வரும் காலங்களில் இவ்வாறான வெள்ள நிலவரங்கள் ஏற்படும் பட்சத்தில் நாங்கள் முற்கூட்டியே வடிகால் அமைப்பு முறைகளை சரியான விதத்தில் பேணிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.

இதற்காக அனைத்து திணைக்களங்களின் ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்த்து நிறகின்றோம்“ என்றும் குறிப்பிட்டுள்ளார். 



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.