எரிசக்தி அமைச்சின் கட்டண அறவீடு குறித்த புதிய தகவல்

 புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டங்களை ஊக்குவிக்கும் முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டங்களுக்கான கட்டண அறவீடு குறித்த புதிய சூத்திரமொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.



20 ஆண்டுகளுக்கான திட்டம்

புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

முதன்மை கட்டணம், திறைசேரி பத்திர கட்டணம் மற்றும் பணவீக்கம் போன்ற காரணிகளை அடிப்படையாகக்கொண்டு இந்த சூத்திரம் உருவாக்கப்படவுள்ளது.

மேலும் 20 ஆண்டுகளுக்கான திட்டமாக இது அமையப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.