வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை! ராஜபக்சக்களின் செல்வத்தை பயன்படுத்துமாறு அநுர தரப்புக்கு அறிவுரை

 எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ராஜபக்‌ச குடும்பத்தின் செல்வத்தை பயன்படுத்துமாறு பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை(18) மாலை கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் ​போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை

தொடர்ந்தும் கருத்து  வெளியிட்ட அவர்,

இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக ஏராளம் பொய்களை அள்ளி வீசியது. உகண்டாவில் ராஜபக்‌ச குடும்பம் பாரிய செல்வத்தைப் பதுக்கியுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டும் அதில் ஒன்றாகும்.



 இந்நிலையில் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை நீக்கிக் கொள்ள உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் ராஜபக்‌ச குடும்பத்தின் செல்வத்தை மீட்டு அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்த அரசாங்கத்திடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.