கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் அமைச்சர் விஜித ஹேரத்

 கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம். தற்போது தென்னிந்தியாவில் தேர்தல் காலம் ஏற்பட்டுள்ளதால், தமது அரசியல் தேவைகளுக்காக ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர். அவ்வாறான அரசியல் கருத்துக்களை பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை, இராஜதந்திர மட்டத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை கூறினார்.


“கச்சத்தீவை மீட்டு தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும்” என, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் தெரிவித்திருந்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.