கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

 ​போலி மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை இன்று(16) கையளிக்கப்பட்டது.

நீண்ட விளக்கத்தின் பின்னர் பிரதிவாதிகள் 12 பேரையும் தலா 05 இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளின் கீழ் விடுவிப்பதற்கு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஹியூமன் இம்யூனோ குளோபுலின் மற்றும் ட்ரிபொப்சிமெப் என அடையாளப்படுத்தி மருந்து அல்லாத வேறு திரவங்கள் அடங்கிய 6,195 குப்பிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவிற்கு வழங்கிய இலங்கை அரசாங்கத்தின் 1,444 இலட்சம் ரூபாவை மோசடியான முறையில் கையாள்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை, குறித்த நிதியை தவறான முறையில் பயன்படுத்தியமை தொடர்பில் 13 குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான மஹேன் வீரமன், அமாலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.