வெற்றியாளர்கள் கௌரவிப்பு
மன்னார் வலய பாடசாலைகளில் குறிப்பிடும் படியான பாடசாலைகளில் ஒன்றான, மன்/ எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்தின் வெற்றியாளர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு நேற்று 18.09.2025 நடை பெற்றது .
இதிலே அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்றோர், மற்றும் கா பொ த (சாதாரண தர) பரிட்சையில் 7A சித்திகளுக்கு மேல் பெற்றோர் ,மற்றும் உயர்தரத்தில் கூடிய சித்திகள் பெற்று, பல்கலைக்கழகத்திற்கு தெரிவானோர் ஆகியோருக்கான மதிப்பளிப்பும் ,அவர்களது பெற்றோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் இன்று மிக சிறப்பாகவும், விமர்சையாகவும் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிரதான அனுசரணையாளர்களில் ஒருவராக இந்த பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் தற்போது பிரான்ஸ் தேசத்தில் வசிப்பவருமான மன்னார் கற்கிடந்த குளத்தைச் சேர்ந்த திரு. ரோக்சன் சைலேந்திரா அவர்கள் வழங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
சிறப்பான இந்த நிகழ்வை நடாத்திய இப்பாடசாலையின் அதிபர் ,ஆசிரியர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் அனைவரையும் "RBC மீடியா" வாழ்த்தி பாராட்டுகிறோம்
Post a Comment