இலங்கைக்கு உரித்தான சப்த தீவுகளில் ஒன்றாகிய நயினாதீவும், முஸ்லீம்களின் பூர்வீகமும்
பாரம்பரியமாக இலங்கையில் மூவினத்தவர்களும், நான்கு சமயத்தை பின்பற்றுபவர்களும் மிக அன்னியோன்னியமாக வசித்துவரும் இலங்கைக்கே உரித்தாகிய “நெயினாதீவு” வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு தனித்தீவாகும்.
மூவினத்தையும் சேர்ந்த சுமார் 500 குடும்பங்கள் வசித்துவரும் இத்தீவானது யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தூரத்தில் அமைத்துள்ளது.
யாழ்பாணம் முதல் குறிகாட்டுவான் வரை வாகனத்திலும் பின்னர் படகுமூலமாகவும் பயணிப்பதன் மூலம் இத்தீவை சென்றடையலாம்.
* பலநூற்றாண்டுகள் வரலாற்றைக்கொண்ட ஷெய்க் ஸதகதுல்லாஹ் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் தர்ஹா ஷரீஃப்.
* 1865ம் ஆண்டளவில் நிர்மாணிக்கப்பட்ட முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளிவாயில்.
* கௌதம புத்தர் அவர்கள் விஜயம் செய்ததாக சொல்லப்படும் பௌத்தர்களின் வரலாற்று முக்கித்துவம் வாய்ந்த நாகதீப விகாரை.
* இந்துக்களின் வரலாற்று முக்கித்துவம் வாய்ந்த நாகபூஷணி அம்மன் ஆலயம்
* புனித அந்தோனியார் தேவாலயம்
ஆகிய மதஸ்தலங்கள் அமைத்துள்ள இயற்கை எழில்கொஞ்சும் ரம்மியமான இத்தீவு இலங்கையர்கள் அனைவரும் ஒருமுறையாவது அவசியம் சென்றுபார்கவேண்டியதொரு பிரதேசம் என பரிந்துரைக்கமுடியும்.
குறிப்பு:
1990ம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் புலிப் பயங்கரவாதிகளால் தங்களது பூர்வீக பிறப்பிடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோதும், இத்தீவில் வசித்துவந்த முஸ்லீம் குடும்பங்கள் மாத்திரம் வெளியேறவிடாமல், ஏனைய மத சகோதரர்களால் பாதுகாப்பளித்து பாதுகாக்கப்பட்டதாக, உணர்வுபூர்வமாக நினைவுபடுத்துகின்றனர் இப்பிரதேசவாசிகள்.
Post a Comment