போதைக்கு அடிமை- தூக்கில் தொங்கிய இளைஞன்

 போதைக்கு அடிமை-

தூக்கில் தொங்கிய இளைஞன்!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனவெளிக்குளத்துக்கு அருகிலுள்ள வீடென்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று (17) இடம் பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் முள்ளிப்பொத்தானை, சிறாஜ் நகர் பகுதியில் வசித்துவரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான நெய்யது அலி பாயிஸ் (24வயது) எனவும் தெரியவந்துள்ளது.

மனைவி மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் குறித்த நபர் போதைக்கு அடிமையாகி உள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த மரணம் தொடர்பிலான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.