ஹரக் கட்டாவை கொல்லும் திட்டம்

 பாதாள உலகத் தலைவர் ஹரக் கட்டாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்தி கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கெஹல்பத்தர பத்மே கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட பாதாள உலகக் கும்பலே இந்த திட்டத்தை தீட்டியிருந்துள்ளது. பாதாள உலக கும்பலுக்கு மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ லெப்டினன்ட் கேணலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இது தெரியவந்தது.
பத்திரிகையாளராக மாறுவேடமிட்டு ஹரக் கட்டாவைக் கொல்லும் திட்டம் தோல்வியடைந்தால், அடுத்த தாக்குதல் திட்டமாக கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா இந்த கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்தத் தயாராகி இருந்துள்ளனர்.
ஹரக் கட்டாவை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பஸ் புதுக்கடை நீதிமன்றத்தை நெருங்கும் போது, ​​நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் கிளேமோர் குண்டை மறைத்து ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி வெடிக்க வைப்பதே பாதாள உலகக் கும்பலின் திட்டமாக இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.