ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் மோதவுள்ள இந்தியா - பாகிஸ்தான்
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் முன்னேறின. சூப்பர்4 சுற்று முடிவில் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
அதன்படி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்ற இந்தியா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 4 சுற்றில் 2-வது வெற்றியை பெற்ற பாகிஸ்தான் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 2-வது தோல்வியை தழுவிய வங்காளதேசம் வெளியேறியது.
இந்நிலையில் இதே மைதானத்தில் வருகிற 28-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன. முன்னதாக இவ்விரு அணிகள் லீக் மற்றும் சூப்பர்4 சுற்றில் சந்தித்த ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Post a Comment