அக்கரைப்பற்றில் திறமையான158 மாணவர்களைக் கெளரவிக்கும் ASSAD INSPIRE AWARDS மாபெரும் நிகழ்வு

 அக்கரைப்பற்றில் திறமையான மாணவர்களைக் கெளரவிக்கும் ASSAD INSPIRE AWARDS மாபெரும் நிகழ்வு



ACMC தலைவர் ரிசாத் பதியூதீன் பிரதம அதிதியாக பங்கேற்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் 2024ம் ஆண்டு க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரத்தில் A தர சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த மாணவ, மாணவியரைக்கெளரவிக்கும் “ASSAD INSPIRE AWARDS-2025” மாபெரும் கெளரவிப்பு நிகழ்வு இன்று மாலை 5.30 மணிக்கு அக்கரைப்பற்று பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கெளரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவரும் முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அத்துடன், கெளரவ அதிதிகளாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹிர், அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத், அட்டாளைச்சேனை பிரதேசசபையின் முன்னாள் உதவித் தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜஃகுபர் ஆகியோரும் விஷேட அதிதிகளாக மாநகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதில் அக்கரைப்பற்று, திருக்கோவில் கல்வி வலயங்களைச் சேர்ந்த சுமார் 158 மாணவ, மாணவியர் நினைவுச் சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டதுடன், பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தோடு மாணவர்களின் கரங்களினால் அவர்களின் பெற்றோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் வாய்ப்பையும் இங்கு வழங்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
மேலும், இங்கு தமிழ், முஸ்லிம் மாணவர்களின் கலை கலாசார நிழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பெரும் பாராட்டையும் பெற்றுக் கொண்டது.
அமைப்பாளர் எஸ்.எம்.சபீஸின் வழிகாட்டலில் ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், ACMC மத்திய குழுவின் செயலாளருமான சபூர் ஆதம் செயற்பட்டு வெற்றிகரமாக நிகழ்வை நிறைவு செய்திருந்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்..

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.