அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவு தேசிய அளவில் சிறந்த மாணவர்களை கௌரவிக்கிறது 17 ஆம் திகதி, மன்னாரில்

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவு தேசிய அளவில் சிறந்த மாணவர்களை கௌரவிக்கிறது!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் உயர் தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

இந்த தேசிய அளவிலான கௌரவிப்பு நிகழ்வுகளுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களை கெளரவிக்கவுள்ளார்.

கல்வித் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் எதிர்கால கல்விப் பயணத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்படுவதாக கட்சியின் கல்விப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வகையில்,
எதிர்வரும் 17 ஆம் திகதி, மன்னார் மாவட்டத்தில் தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன்,

இந்நிகழ்வுகளுக்கு, கட்சியின் அரசியல் அதிகார பீட உறுப்பினர்கள், உயர்பீட உஉப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.