ஐசிசியின் டி-20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இலங்கை அணியின் வீரர் பெத்தும் நிஸ்ஸங்க 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசியின் டி-20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இலங்கை அணியின் வீரர் பெத்தும் நிஸ்ஸங்க 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதே போட்டியில் அரைசதம் விளாசிய குசல் ஜனித், 11வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டி-20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இதற்கிடையில், டி-20 சகலதுறை வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் வீரர் ஹர்திக் பாண்டியாவை பின்தள்ளி பாகிஸ்தான அணியின் வீரர் சயிம் அயூப் (saim ayub) முதலாவது இடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச டி-20 சகலதுறை வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் அவர் முதலிடத்தை எட்டுவது இதுவே முதல் முறைாகும்.
அயூப்பின் முன்னேற்றத்துடன், பாண்டியா இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

Post a Comment