புத்தளம் கல்வி வலயத்தின் சிறந்த மாணவர்களை ACMC கௌரவித்தது.
ASSAD INSPIRE AWARDS - புத்தளம் கல்வி வலயத்தின் சிறந்த மாணவர்களை ACMC கௌரவித்தது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், புத்தளம் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில், உயர்தர பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (15) புத்தளம் மாநகரசபை மண்டபத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான MTM. தாஹீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக புத்தளம் மாநகர மேயர் ரின்ஸாட், உப மேயர் நுஸ்கி , புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் ராதிக சஞ்சீவ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நபவி, புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டக்கல்விப் பணிப்பாளர்களான அஸ்கா, நௌசாட், ஜவாட் உள்ளிட்டோருடன் புத்தளம், கற்பிட்டி, சிலாபம் உள்ளிட்ட சபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.




Post a Comment