காசாவிற்கான உதவிப்பொருட்களை எடுத்துச்சென்ற சமூக ஆர்வலர் பலரைக் கைது செய்த இஸ்ரேலிய இராணுவம்

 காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களிலிருந்து பல கப்பல்களை இஸ்ரேலிய இராணுவம் தடுத்து நிறுத்தி, அதிலிருந்த பல ஆர்வலர்களைக் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 
44 கப்பல்கள் மற்றும் சுமார் 500 ஆர்வலர்களைக் கொண்ட குளோபல் சுமுத் புளோட்டிலாவிலிருந்து குறைந்தது மூன்று கப்பல்கள், காசா கடற்கரையிலிருந்து சுமார் 70 கடல் மைல்கள் (130 கி.மீ) தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

இதன்போது ஸ்வீடிஷ் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடற்படையின் "பல கப்பல்கள்" பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு, அவற்றின் பயணிகள் இஸ்ரேலிய துறைமுகத்திற்கு மாற்றப்படுகிறார்கள் என்று இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.