அகில இலங்கை ஹஜ் பயண முகவர்கள் சங்கத்தின் புதிய தலைவராக முஹம்மத் ஹாஜி தெரிவு
அனுமதிப்பெற்ற ஹஜ் பயண முகவர் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இச்சங்கத்தின் 2025/2026 ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழுவைத் தெரிவுசெய்வதற்கான வருடாந்த பொதுக்கூட்டம் (AGM) (20) திங்கட்கிழமை கொழும்பு மெண்டரினா ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
சங்கங்கள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 123) பிரிவு 3(b) இன் கீழ், வர்த்தக மற்றும் வாணிப அமைச்சரால் 1997 பிப்ரவரி 24ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இச்சங்கம், இலங்கையின் ஹஜ் மற்றும் உம்ரா பயண நிறுவனங்களின் சட்டபூர்வ பிரதிநிதித்துவ அமைப்பாக தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நிர்வாகக் குழு (2025/2026)
தலைவர்:
MSH. Mohamed – NM Travels & Tours
பொது செயலாளர்:
Subail M. Noordeen – Haadhee Travels (Pvt) Ltd
துணைத் தலைவர்:
Moulavi UL. Ubaithu – Kanzullah Hajj Travels
பொருளாளர்:
M.M.M. Harees – Eigen Weg Travels
நிர்வாக உறுப்பினர்கள்:
1. F. Omar Nishatha – Al Safaa Travels & Tours (Pvt) Ltd
2. SMA. Zaanas – Yara Travels (Pvt) Ltd
3. MSM. Shafaath – Royal Fathima Travels
4. MRM. Fahim – Hamdhan’s (Pvt) Ltd






Post a Comment