மன்னார் மக்கள் எதிர்பார்த்த செய்தி - காற்றாலைத் திட்ட விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை

 மன்னார் தீவில் தற்போது அமைக்கப்படுவதைத் தவிர புதிய காற்றாலை திட்டங்களை முன்னெடுக்காதிருப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தைத் தயாரிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 



 
இதற்கான கோரிக்கை கடிதத்தை, ஆவணமாக சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட செயலகத்திற்கு எரிசக்தி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணகேஸ்வரன் எமது செய்தி சேவைக்கு தெளிவுபடுத்தினார். 
 
குறித்த அறிவிப்புக்கு அமைய, மன்னார் மாவட்டத்தில் இயங்கும் பொது அமைப்புகள், சர்வ மத அமைப்பு மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவிடம் மனுக்கள் கோரப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். 
 
அதற்கிணங்க, பொது அமைப்புகளிடமிருந்து கடிதம் கிடைத்துள்ளதாகவும், சர்வமத அமைப்புகள் மனுக்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 
 
எனினும், மன்னார் பிரஜைகள் குழு இந்த தீர்மானத்திற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார். 
 
கோரிக்கை கடிதம் கிடைத்ததன் பின்னரே எரிசக்தி அமைச்சு கோரியுள்ள ஆவணத்தைத் தயார் செய்து அனுப்ப முடியும் எனவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.