மஸ்கெலியா நல்லதண்ணி தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

 மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி, லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று (09) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது.


தேயிலை தூள் உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட தீ, தேயிலை இலைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சேமிப்பு அறைக்கும் பரவியதாகவும், பொட்டலம் கட்டப்பட்ட தேயிலைத் தூளும் பெருமளவில் எரிந்து நாசமானதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.




பரவிய தீ, தோட்ட மக்களால் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.


இருப்பினும், தோட்ட நிர்வாகம் திட்டமிட்டு தீயை மூட்டியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.


தீயினால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை. மேலும் தீயில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.


தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.


நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.