வைத்தியரைத் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் பிணையில் விடுதலை – வீட்டிலிருந்த குண்டு காரணமாக மீண்டும் விளக்கமறியலில்!
வைத்தியரைத் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் பிணையில் விடுதலை – வீட்டிலிருந்த குண்டு காரணமாக மீண்டும் விளக்கமறியலில்!
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை அவரை 50,000 ரூபா ரொக்கம் மற்றும் தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் ஆகியவற்றின் பேரில் நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.
எனினும், பின்னர் அந்த சந்தேகநபரின் வீடு சோதனை செய்யப்பட்டபோது, வீட்டினுள் இருந்து ஒரு கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு இந்த மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி இரவு, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்று வந்த 32 வயதுடைய விசேட வைத்திய நிபுணர் ஒருவர், தனது உத்தியோகபூர்வ உறைவிடத்தில் வைத்து இனந்தெரியாத ஒருவரால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பின்னர் கைது செய்யப்பட்டவர், நிலந்த மதுர ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இராணுவ சேவையில் இருந்து தப்பிச் சென்றவர் ஆவார்.
இவர் கால்கனேவ, நவனகரைய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்றும், வேறொரு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்றும், மேலும் பௌத்த பிக்குவாகவும் இருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட வைத்தியர் அடையாளம் காணும் அணிவகுப்பில் முன்னாள் இராணுவ சிப்பாயான சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளார்.




Post a Comment