சம்மாந்துறை வலய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு
சம்மாந்துறை வலய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு..
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், சம்மாந்துறை வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில், உயர்தர பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (10) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை மஜீட் மண்டபத்தில், பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹீர், சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் மஹேந்திரகுமார், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.










Post a Comment