அதி அபாயகரமான 'புளூடூத்திங்' பழக்கத்தால் தீவிரமடையும் HIV
இளைஞர்கள் மத்தியில் பரவிவரும் 'புளூடூத்திங்' (Bluetoothing) அல்லது 'ஹொட்ஸ்போட்டிங்' (Hotspotting) என்ற அதிபாயகரமான புதுப் பழக்கத்தால் தென் பசிபிக் நாடான பிஜியில் (Fiji) எச்ஐவி (HIV) தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது.
இது ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
'புளூடூத்திங்' என்றால் என்ன?
இது இலத்திரனியல் கருவி தொழில்நுட்பம் அல்ல. இது போதைப்பொருள் பாவனையாளர்கள், ஊசியைப் பயன்படுத்தி போதை மருந்து கலந்த இரத்தத்தை ஒருவர் மற்றவருடன் பரிமாறிக்கொள்ளும் ஆபத்தான நடைமுறையாகும்.
போதைப் பொருள் விலை மற்றும் ஊசி தட்டுப்பாடு காரணமாக, ஒருவர் போதைப்பொருளை வாங்கி அதனை உடலில் ஏற்றிக்கொள்ளவதுடன், அவரது இரத்தத்தை பெற்று தமது உடலில் ஏற்றுவதையே 'புளூடூத்திங்' என குறிப்பிடுகின்றனர்.
பிஜியில் இந்த பழக்கம் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




Post a Comment