விரைவில் இலங்கை மக்களுக்கு ரணில் சொல்லப் போகும் செய்தி..

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட  உரையொன்றை ஆற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் இது தொடர்பான அறிவித்தல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலையைக் கருத்திற் கொண்டு நேற்றையதினம் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

சுமார் 50 இலட்சம் ரூபா அடிப்படையில் மூன்று சரீரப் பிணைகளின் கீழ் வெளியில் செல்ல ரணில் விக்ரமசிங்க அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில்,ரணில் விக்ரமசிங்க கைது விவகாரம் இலங்கையின் அரசியல் பரப்பில் மிக அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், வைத்தியசாலையில் இருந்து அவர் வெளியேறி, அவரது உடல் நிலை சீரானதும் நாட்டு மக்களுக்கு அவர் சிறப்பு உரையாற்றுவார் என்று கூறப்படுகின்றது. 

மேலும், ரணில் விக்ரமசிங்கவிற்கு கடந்த சில நாட்களாக ஆதரவாக இருந்த பொதுமக்களுக்கு ரணில் தரப்பில் இருந்து நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.  

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.