மஹிந்த இன்று வெளியேறுகிறார்

 

இலங்கையின் முன்னாள் (அதிபர்களுக்கு) ஜனாதிபதிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்து சிறப்பு வரப்பிரசாதங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்..


முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ளார் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் மசோதா நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற முடிவு செய்ததாக அதே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதன்படி, கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் மஹிந்த ராஜபக்ஷ, தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு செல்லவுள்ளார்.
இதேவேளை முன்னாள் அதிபர்களில் ஒருவரான மைத்ரிபால சிறிசேனாவும் ஏற்கனவே வெளியேறிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.