பிரான்ஸ் நாட்டில் அரசு கொண்டு வந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் பாரீஸ் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் போர்க்களம் போல முக்கிய இடங்கள் காட்சி அளிக்கின்றன. போராட்டக்கார்கள் சுமார் 200 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் போராட்டம் வெடித்து இருக்கிறது. "அனைத்தையும் முடக்குங்கள்" என்ற கோஷத்துடன் ஆன்லைனில் முன்னெடுக்கப்பட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியாக, இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் பாரிஸ் உள்பட பல்வேறு இடங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்சில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பிரதமர் பிரான்சுவா பாயுரோவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பிரதமர் தோல்வி அடைந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததால் தனது பதவியை பிரதமர் பிரான்சுவா ராஜினாமா செய்தார்.
பிரதமர் பிரான்சுவா தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து மாற்று ஏற்பாடாக, அதிபர் இமானுவேல் மேக்ரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபஸ்டியன் லெகோர்னுவை புதிய பிரதமராக நியமித்தார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 4 புதிய பிரதமர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய புதிய பிரதமர்கள் நியமனம் செய்வதற்கும், அரசின் செலவுகளை சிக்கனமாக செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நாட்டின் முக்கிய நகரங்களில் போக்குவரத்தை வழிமறிக்கும் வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டன.
Post a Comment