மறு அறிவித்தல்வரைக்கும் அனைத்து மஸ்ஜித்களிலும் குனூத்துடைய துஆவை ஓதவும்!

 மறு அறிவித்தல்வரைக்கும் அனைத்து மஸ்ஜித்களிலும் 

குனூத்துடைய துஆவை ஓதவும்!


மஸ்ஜித்களின் கண்ணியத்துக்குரிய இமாம்களுக்கு.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு


பலஸ்தீன் – காஸாவில் சுமார் 23 மாதங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலில் இன்று வரை 65,000 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்தும், 164,264 க்கும் மேற்பட்டோர் காயமுற்றும் உள்ளனர்.


எனவே, அப்பகுதியில் தற்போது இடம் பெற்றுவரும் கொடூரமான தாக்குதல் நிறுத்தப்படவும் அமைதி, சமாதானம் மற்றும் நீதி நிலை நாட்டப்படுவதற்கும் அனைத்து மஸ்ஜித்களிலும் பஜ்ர் தொழுகையில் ஓதக்கூடிய குனூத்துடைய துஆவை ஐவேளைத் தொழுகைகளில் மஃமூம்களுக்கு சடைவில்லாமல் மறு அறுவித்தல் வரை ஓதிவருமாறும் அதில் பின்வரும் துஆக்களை சேர்த்துக் கொள்ளுமாறும் மஸ்ஜிதுடைய இமாம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.


அத்துடன் தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா மற்றும் இஸ்திஃபார் போன்ற நல்லமல்களைச் செய்வதில் கூடிய கவனம் செலுத்தி துஆப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அனைத்து முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.


‎اللَّهُمَّ اكْتُبِ الأمْنَ والسَّلَامَةَ عَلَى العِبَادِ والبِلَادِ خَاصَّةً فِيْ فِلَسْطِيْنَ

‎اللَّهُمَّ احْرُسْهُم بِعَيْنِكَ الَّتِي لَا تَنَام، وَاكْنُفْهُم بِرُكْنِكَ الَّذِي لَا يُرَام، وَاحْفَظْهُم بِقُدْرَتِكَ عَلَيْهِم، وَأَنْتَ رَجَاؤُنَا وَرَجَاؤُهُم.

‎اللَّهُمَّ حَرِّرِ الْمَسْجِدَ الأَقْصَى مِنْ كَيْدِ الغَاصِبِيْنَ وَالظَّالِمِيْنَ

‎اللهُمَّ اكْفِنَا شَرَّ الظَّالِمِينَ

‎اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ في نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

‎اللهُمَّ اكْفِهِمْ بِمَا شِئْتَ يَا رَبَّ الْعَالَمِيْنَ


முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி தலைவர்அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்ஷைக் எம்.டி.எம். ஸல்மான் பதில் செயலாளர், பத்வாக் குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.