தென் மாகாணத்தில் GovPay ஊடாக கட்டணம் செலுத்தும் வசதி
தென் மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு GovPay ஊடாக கட்டணம் செலுத்தும் வசதி இன்று (15) பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்ட செயலகங்கள் உட்பட மூன்று மாவட்டங்களில் உள்ள 50 பிரதேச செயலகங்கள் மற்றும் 03 மாவட்ட செயலகங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு இன்று முதல் பொதுமக்கள் இந்த GovPay ஊடாக பணம் செலுத்த முடியும்.
மாத்தறை மாவட்டத்தில், மாவட்ட செயலகம் உட்பட பதினாறு (16) பிரதேச செயலகங்கள், காலி மாவட்டத்தில், மாவட்ட செயலகம் உட்பட இருபத்தி இரண்டு (22) பிரதேச செயலகங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், மாவட்ட செயலகம் உட்பட பன்னிரண்டு (12) பிரதேச செயலகங்களிலும் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும்.
நாட்டில் முதல் முறையாக, இந்த GovPay முறை ஊடாக கட்டணம் செலுத்தும் முறை, இன்று ஒரே நேரத்தில் 53 அரச நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
Post a Comment