மாவனெல்லையைச் சேர்ந்த முஹம்மத் ஸுஹைல் PTA வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை
9 மாதங்கள் அநியாயமாக PTA இன் தடுத்து வைக்கப்பட்டு, கடந்த ஜுலை மாதம் 15 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட மாவனெல்லையைச் சேர்ந்த முஹம்மத் ஸுஹைல், இன்று கல்கிஸ்ஸை நீதிவானினால் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டார்.
இன்று (16.09.2025) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முஹம்மத் ஸுஹைல் சார்பாக ஆஜரான சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி இல்ஹாம் ஹஸனலி, "விசாரணைகளில் குற்றத்திற்கான எந்த ஆதாரமும் வெளிப்படவில்லை என்று பொலிஸார் ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதால் அவரை விடுதலை செய்யாமல் வைத்திருப்பது அவருக்கு நடக்கும் அநீதி. ஆகவே அவரை உடனடியாக வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு" நீதிவானிடம் வேண்டிக்கொண்டார்.
இதன் போது கல்கிஸ்ஸை நீதிவான், முஹம்மத் ஸுஹைலை PTA வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யும் உத்தரவை வழங்கினார்.
இதேவேளை சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு, சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் ஸுஹைல் சார்பாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதோடு, இந்த வழக்கானது, வழக்கை முன்கொண்டு செல்வதற்கான நீதிமன்றின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள (granting of leave) 23/03/2026 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment