கொழும்பு சென்ற பேரூந்து விபத்து. 28 பேருக்கு காயம்

 கொழும்பு சென்ற பேரூந்து விபத்து. 28 பேருக்கு காயம்

கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பேரூந்து நிறுத்தப்பட்டிருந்த பேரூந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சிகிச்சை பலனின்றி மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், பின்னால் வந்த பேரூந்து அதிவேகமாக பயணித்ததால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.