சிறுவர் தினத்தை முன்னிட்டு ரிஷாட் பதியுதீன் வாழ்த்துச் செய்தி

 "சிறுவர்களை மேதையர்களாக முன்னேற்ற முனைப்புடன் செயற்படுவோம்" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

எதிர்கால வியூகங்களை அடித்தளமாக அமைத்து, வருங்கால சவால்களை வெற்றிகொள்ளும் வீரர்களாக நமது செல்வங்கள் வளர வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,
"சிறுவர்கள்தான் எதிர்காலத்தின் விடிவெள்ளிகள். நம்மிடமுள்ள விலையில்லாச் சொத்துக்களும் இவர்களேதான். இவர்களை சரியான பாதையில் வழிநடத்தும் பொறுப்பு பெற்றோர்களாகிய நமது விருப்பமாக இருக்க வேண்டும்.
சிறுவர்களின் இலட்சியங்களை எமது எண்ணங்களோடு இணைத்து வழிகாட்டுவதே வெற்றிக்கு வித்திடும். அடக்குமுறைக்குள் தவிக்கும் அப்பாவிச் சிறுவர்களை மீட்டெடுப்பதற்கான சிந்தனைகளில், பெற்றோர்கள் ஒன்றுபடுவதற்கு இத்தினமே பொருத்தமானது.
நமக்கு முன்னுள்ள மிகப்பெரிய உலகத்தின் வாரிசுகளாகவுள்ளவர்கள் இன்றைய சிறுவர்களே! இவர்களை மேதையர்களாக முன்னேற்றுவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இந்நாளிலிருந்து இதில் கவனம் செலுத்துவதற்கு தயாராகுமாறு சகல பெற்றோர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்" இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளார்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.