“வளரும் சிறுவர்கள் உயரும் தேசம்” நூர் முஹம்மது உசன் அவர்களின் சிறுவர் தினவாழ்த்துச் செய்தி

 மகிழ்ச்சியான சிறுவர் தின நல்வாழ்த்துகள்!”

சமூகத்தின் தூண்களாக வலுவாக வளர்ந்து வரும் நம் நாட்டின் சிறுவர்களுக்கு, இன்றைய சிறுவர் தினத்தன்று என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளைச் சுதந்திரமாகப் பறக்க வைக்கும் உரிமையும், பாதுகாப்பும், உரிய கல்வி வாய்ப்பும் கொண்டிருக்க வேண்டும்.  

அவர்கள் நற்பண்புகள், அறிவு, ஆர்வம் ஆகியவற்றால் நாடு முன்னேறும் என்பது உறுதியாகும்.

நகரசபை உறுப்பினராக, என் பகுதியில் உள்ள அனைத்துச் சிறார்களுக்கும், எமதூரின் அனைத்து சிறார்களுக்குமான  சிறந்த வாழ்வை நோக்கிப் பயணிக்க, தேவையான ஒத்துழைப்பை வழங்க நான் என்றும் உறுதியுடன் நிற்கிறேன்.

“வளரும் சிறுவர்கள் உயரும் தேசம்”

என்பதையே நம்முடைய நோக்கமாகக் கொண்டு, சிறுவர் நலனுக்காக நாம் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம்.




நூர் முஹம்மது உசன் 

மன்னார் நகர சபைபிரதி தவிசாளர்  

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,

மன்னார் 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.