மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆறுகள் அமைந்துள்ள பகுதிகளில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.
சீரற்ற காலநிலையை தொடர்ந்து மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆறுகள் அமைந்துள்ள பகுதிகளில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.
மழை நிலைமை நீடித்தால் அடுத்த 36 மணி நேரத்திற்குள் அலவ்வ, திவுலப்பிட்டி, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மகா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
அனைத்து தரப்பினரும் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Post a Comment