ASSAD INSPIRE AWARDS - முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களை கௌரவித்தது ACMC
ASSAD INSPIRE AWARDS - முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களை கௌரவித்தது ACMC
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில், உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (18) முள்ளியாவலை குயீன் பிளாசா வரவேற்பு மண்டபத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், பிரதேச சபை உறுப்பினருமான பொன்னுச்சாமி பிரிந்தாவனம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன், உதவித்தவிசாளர் அனோசன், பிரதேச சபை உறுப்பினர்களான சுந்தரமூர்த்தி, சதாசிவம் திருமறைச்செல்வி, ஜெஸ்மின் கிளாரிஸ், ரிஸாம் ஜமால்தீன் உட்பட இணைப்பாளர்களான வன்னியசிங்கம், கிருஸ்னபகவான், சிப்றி, ஈஸ்வரனாதன், ரனிஸ்லா, தலைவரின் இணைப்பாளர் சட்டத்தரணி மபாஸ், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.










Post a Comment