எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்திருந்ததாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்திருந்ததாக, குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகல எந்த நேரத்திலும் தன்னை கைது செய்வார் என அறிந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

7 மாதங்கள் நேபாளத்தில் தலைமறைவாகி இருந்த போதும், வெறுப்பு நிலைமை ஏற்பட்டது. இலங்கை செல்லலாம் என எண்ணிய போதும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நேபாளத்தில் பதுங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு அதிரடி படையின் நடவடிக்கையின் காரணமாக நேற்றையதினம் நேபாளத்தில் வைத்து இஷாரா கைது செய்யப்பட்ட போது, இந்தத் தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் ஆய்வாளர் கிஹான் டி சில்வா ஆகியோர் நேபாளத்தில் நடத்திய மூன்று நாள் சோதனையில் இந்த பாதாள உலகக் கும்பல் கைது செய்யப்பட்டது



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.