பிபா உலகக் கோப்பைக்கான தகுதி சுற்றுப் போட்டியில், கத்தார் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

 பிபா உலகக் கோப்பைக்கான தகுதி சுற்றுப் போட்டியில், கத்தார் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கத்தார் நேற்று (14) நடைபெற்ற முக்கியமான தகுதி சுற்றுப் போட்டியில் கத்தார் அணி 2–1 என்ற கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை (UAE) வீழ்த்தி 2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.
மேலும், 2022 பிபா உலகக் கோப்பையை நடத்தும் நாட்டு என்ற அடிப்படையில் பங்கேற்றதற்குப் பிறகு, தகுதி அடிப்படையில் முதல் முறையாக கத்தார் அணி உலகக் கோப்பை போட்டியில் தகுதி பெற்றுள்ளது.
2026 ஃபிஃபா உலகக் கோப்பை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. இது உலகக் கோப்பை வரலாற்றில் மூன்று நாடுகள் சேர்ந்து நடத்தும் முதல் முறை ஆகும்.
மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகள் ஜூன் – ஜூலை 2026 காலப்பகுதியில் நடைபெறும். அமெரிக்காவின் 11 நகரங்கள், மெக்சிகோவின் 3 மற்றும் கனடாவின் 2 நகரங்கள் போட்டிகளை நடத்தவுள்ளன.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.