புறக்கோட்டை பழ வர்த்தகருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை

 வர்த்தகர் ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 3 வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இரண்டு கொள்கலன்களில் அடங்கிய பழங்கள் தொகைக்கான 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த தவறியுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவத்தில் பாதிப்புக்கு உள்ளான அமெரிக்க ஏற்றுமதியாளருக்கு 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்க வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் பிரதிவாதிக்கு உத்தரவிட்டுள்ளது.

புறக்கோட்டையை தளமாக கொண்டு பழ வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த குறித்த வர்த்தகர் நீண்டகாலமாக அமெரிக்காவிலுள்ள வர்த்தக ஒருவரிடமிருந்து பழங்களை இறக்குமதி செய்து வந்துள்ளார். பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் இந்த வர்த்தகம் இடம்பெற்று வந்துள்ளது.

குற்றமிழைக்கப்பட்டவர் பல சந்தர்ப்பங்களில் பழங்களை கொள்வனவு செய்த அவற்றிற்கான பணத்தை உரிய முறையில் வழங்கி வந்துள்ளார். எவ்வாறெனினும், இறுதியாக இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் தொகை அடங்கிய இரு கொள்கலன்களுக்கான கட்டணத்தை அவர் செலுத்த தவறியுள்ளார்.

குறித்த கொள்கலன்களின் திராட்சை, ஆப்பிள் பழங்கள் இருந்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில் பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபமானமாகியுள்ளதால் இந்த தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.