உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானை!
மாத்தளை, இரத்தோட்டை, வேரகம, இகிரியகொல்ல காட்டுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
15 வயது மதிக்கத்தக்க யானை ஒன்றே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த யானை நீண்ட நாட்களாக வேரகம பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வந்ததாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)



Post a Comment