மன்னாரில் 8 வயது சிறுமி துஷ்பிரயோக குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டனை

 மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் குற்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி . எம். மிஹால் முன்னிலையில் நேற்று புதன்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் பின்னர், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டார். எதிரி தரப்பிற்கு சார்பாக சட்டத்தரணி தினேஷன் ஆஜராகியிருந்தார்.
வழக்குத்தொடருநர் தரப்பிற்காக, அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார்.
தண்டனை குறித்த தனது சமர் பணத்தில், அரச சட்டவாதி . தனுஷன் அவர்கள், "இக் குற்றத்தின் பாரதூரமான தன்மையையும், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்" கடுமையாக வலியுறுத்தினார்.
மேலும், "எதிர்காலத்தில் இவ்வாறான கொடூரமான குற்றங்கள் மீண்டும் இடம் பெறாமல் தடுக்கும் பொருட்டு, குற்றவாளிக்கு அதியுச்ச கட்டாய சிறை தண்டனை வழங்க வேண்டும்" எனவும், "கொடூரமான இந்த செயலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நஷ்ட ஈட்டை பெற்றுத் தருமாறும்" மன்றை அவர் கோரினார்.
அரச சட்டவாதி அவர்களின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி , குற்றவாளிக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக 200,000/- ரூபாய் (இரண்டு லட்சம் ரூபா) தண்டப்பணம் செலுத்துமாறும் குற்றவாளிக்கு கட்டளையிட்டு நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார்.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.