பீடி இலைகளுடன் மூவர் கைது; மன்னார் கடற்பகுதியில் டிங்கி படகு மீட்பு.!

பீடி இலைகளுடன் மூவர் கைது; மன்னார் கடற்பகுதியில் டிங்கி படகு மீட்பு.!

மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற பீடி இலைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.
மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் (08) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் 1,211 கி.கி பீடி இலைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் 03 சந்தேகநபர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.
கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நேற்று முன்தினம் இரவு நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மன்னார் ஓலைதொடுவாய் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டது. மேலும், அந்த டிங்கி படகில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1,211 கி.கி. பீடி இலைகளுடன் 3 சந்தேக நபர்கள் மற்றும் 1 டிங்கி படகானது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேகநபர்கள் கல்பிட்டியின் தொரடி மற்றும் ஜனசவிபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மதுவரி சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.