மடு புதிய பிரதேச செயலாளராக திரு. R.C. அமலராஜ் பொறுப்பேற்றார்!
அவரது நியமனக் கடிதம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களால் இன்று காலை 9.00 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது.
திரு. அமலராஜ் அவர்கள் 1996 செப்டம்பர் 4 ஆம் தேதி எழுதுனராக அரசுப் பணியில் இணைந்து, கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு முக்கிய நிர்வாக மற்றும் தேர்தல் பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
அவரது பணியியல் பயணத்தில் இடம்பெற்ற முக்கிய நிலைகள் வருமாறு:
உதவி பிரதேச செயலாளர், செட்டிகுளம் பிரதேச செயலகம் (2009–2010)
நிர்வாக உத்தியோகத்தர், வவுனியா நகர பிரதேச செயலகம் (2010–2014)
உதவி தேர்தல் ஆணையாளர், கிளிநொச்சி மாவட்டம் (2014–2019)
உதவி தேர்தல் ஆணையாளர், முல்லைத்தீவு மாவட்டம் (2017–2018)
உதவி பிரதேச செயலாளர், பூநகரி பிரதேச செயலகம் (2018–2019)
உதவி தேர்தல் ஆணையாளர், யாழ்ப்பாணம் மாவட்டம் (2019–2025)
உதவி தேர்தல் ஆணையாளர், வவுனியா மாவட்டம் (2025 மார்ச்–நவம்பர்)
நிர்வாக திறமை, கடமை உணர்வு மற்றும் சிறந்த சேவை மனப்பான்மை ஆகியவற்றால் விளங்கும் திரு. அமலராஜ் அவர்கள், தமது பணிக்காலத்தில் பொதுச் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Post a Comment