கச்சதீவுக்கு விஜயம் செய்த முதலாவது இலங்கை ஜனாதிபதி



இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசனாயக அவர்கள் இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவுக்குச் சென்ற முதல் ஜனாதிபதியாக விளங்குகிறார்.


கச்சதீவை இலங்கைக்கு சொந்தமாக்கிய 1974ம் ஆண்டுக்கு பின்னர் வந்த 09 ஜனாதிபதிகளில் எவரும் கச்சதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருக்கவில்லை.

அதற்கான ஆவணங்களோ, செய்திகளோ கடந்தகாலத்தில் இல்லை என்பதே அதன் அர்த்தம். தனிப்பட்ட விஜயங்களாக செய்திருக்கவும் வாய்ப்புகள் அரிதாகவே தெரிகிறது.
1974 - 2025: கச்சதீவு மீட்பு பற்றி இடைவிடாத சூடான விவாதங்கள் இந்தியாவில் இடம்பெற்றே வந்தன.
இப்படியிருக்க,
2025 ஆகஸ்டில் இந்தியாவின் மதுரை மாநாட்டில் விஜய் கச்சதீவை மீட்க முடியுமா? என மோடியை கேட்க, அதிலிருந்து மீண்டும் விடயம் பேசுபொருளாகமாறியிருக்கும் நிலையில்,
தன்தேச எல்லையில் தனது காலடியை - முதலாவது ஜனாதிபதியாக வைத்துள்ளார் அநுர.
இந்தியா பிரதமர் மோடி, எவ்வாறு இந்தியாவின் நான்கு திசை எல்லைகளுக்கும் சென்றாரோ அதே போன்ற அணுகுமுறையாக இதை கவனிக்க வேண்டும்.
இந்த காலடி, தீவிர தேசியவாத கொள்கையுடைய - நாட்டை பிளவுபடுத்தவோ தாரைவார்க்கவோ விரும்பாத தரப்புகளுக்கு நம்பிக்கையை கொடுக்கும் ஒரு பாய்ச்சல் இதுவாகும்.




No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.